கண்டாவளையில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் இன்று கண்டாவளையில் இடம்பெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் நிதி அனுசரையுடன், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் இன்று கண்டாவளையில் இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் ஆரம்மான குறித்த மருத்துவ முகாம் தர்மபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம் பெற்றது.

வடமாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக மத வழிபாட்டுத்தலங்களில் கடமைபுரியும் மதகுருமார்கள், மற்றும் ஊழியர்களிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நடமாடும் சேவையில் பொதுமக்களும் கலந்துகொண்டு கண்டாவளை சுகாதார சேவைகள் பணிமனையினரிடம் சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனையையும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *