கிளிநொச்சியில் 3776 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை! அரச அதிபர் தெரிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3776 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய மாவட்டத்தில் தடுப்பூசி போடுபவர்களுடைய கணக்கெடுப்பை செய்து வருகின்றோம்.

அக்கெணக்கெடுப்பில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி போடும் கணக்கெடுப்பை பார்க்கின்றபொழுது 3776 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது மிகவருத்ததிற்குரிய விடயம்.

அப்படி தடுப்பூசியை போடுகின்றவர்கள் தங்களை ஓரளவு தொற்றிலிருந்து பாதுகாக்கக்கூடியதாக இருக்கும்.

அதன் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அது உங்களிற்கும், உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களிற்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இந்த விடயத்தில் முதியுார் அமைப்புக்கள் மற்றும் முதியுார் கழகங்கள் விழிப்புடன் இருந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை ஊக்குவித்து அவர்களும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொடுக்க வே்ணடும் எனமேலும் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய சமூக பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம். வறுமையிலே காணப்படும் மாவட்டமாக எமது மாவட்டம் இருக்கின்றது.

இவ்வாறான தொற்றுக்களின் ஊடாகவும் எமது மாவட்டம் பாதிப்புக்குள்ளாகாதபடி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவேண்டியதும் அவசியமானது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் என மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *