எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் எதிர்க்கட்சியால் , எம்மை அசைக்க முடியாது என ஸ்ரீலங்கா பெரமுனவின் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், பொருளாதாரம், நோய் நிலை குறித்து சிந்திக்காமல் செயற்படுகின்றனர்.
நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டங்களை செயல்படுத்த ஒரு அரசை நடத்தி வருகிறோம்.
அதனால் தான் மக்கள் வாக்கு மூலம் ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
எனவே, இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதும் எதிர்மறையான பொருளாதாரத்துடன் நாட்டைக் கைப்பற்றினோம்.
அப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்தில், உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று நம் நாட்டையும் வந்தடைந்தது.
இதனால் நமது நாட்டின் முன்னேற்றமும், நாட்டின் பொருளாதாரமும் தடைபட்டது – என்றார்.