கொடிகாமத்தில் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார்.
கொடிகாமம் – கச்சாய் பகுதியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவருக்கு, அவரது அயல் வீட்டில் உள்ள குடும்பஸ்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த குடும்பப் பெண்ணின் கணவரும் பிள்ளைகளும் வெளியில் சென்றிருந்த நிலையில், அயல்வீட்டில் உள்ளவர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் முரண்பட்டுள்ளார்.
இதையடுத்து, குறித்த சந்தேகநபர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த பெண் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
தற்போது சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் கொடிகாமம் பொலிஸார் அவரைத்தேடி வலைவீசி வருகின்றனர்.