இராணுவ உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் குன்னூர் அருகே நடந்த இராணுவ உலங்கு வானூர்தி விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், குறித்த விபத்தில் குரூப் கெப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், ஆபத்தான கட்டத்தில் காணப்படுகிறார்.
இதேவேளை, இலங்கை பிரதமர் ராஜபக்ச, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ, ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரகம், பிரெஞ்சு தூதர், சிங்கப்பூர் தூதரகம், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சொலி, முன்னாள் அதிபர், தைவான் வெளியுறவு அமைச்சகம், பூடான் பிரதமர் என பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.