தாதியர் கல்லூரிகளில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றின் வசதிகளை மேம்படுத்துமாறு சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தாதியர் கல்லூரிகளிலும் வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு அமைச்சர் ரம்புக்வெல்ல அண்மையில் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, அவற்றிலுள்ள அனைத்து குறைபாடுகளையும் கண்டறிந்து விரைவில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் செயற்படும் 17 தாதியர் கல்லூரிகளின் வசதிகள் மேம்படுத்தப்பட்டு அவற்றின் குறைபாடுகளை விரைவில் கண்டறிந்து அவற்றுக்கு உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதார சேவையில் முக்கிய பங்காற்றும் தாதியர் ஊழியர்களுக்கான அனைத்து பயிற்சிகளும் தாதியர் கல்லூரிகளினால் வழங்கப்படுவதால் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.