தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சிறிய கடையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள மீரா நகர் பகுதியில் கடையொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் போது, கடையில் இருந்த பெண்ணொருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
குறித்த கடை பெட்ரோல் விற்பனை கடை என்பதால் தீ பரவி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.