
கல்முனையில் சிகிச்சைநிலைய முகாமையாளர் பதவிக்கான வெற்றிடம்!

சர்வம் அறக்கட்டளை நிறுவனம் கனடா என்பது இலாப நோக்கமற்ற பதிவுசெய்யப்பட்ட ஒரு அறக்கட்டளை நிறுவனமாகும். இலங்கையிலுள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிகிச்சை அளித்தல் எமது பிரதான இலக்கு.
நாம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் அமைந்துள்ள விசேடதேவையுடைய பிள்ளைகளுக்கான சிகிச்சை நிலைய முகாமையாளர் பதவிக்கு ஆர்வமுடையோரிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கின்றோம்
சிகிச்சைநிலைய முகாமையாளரது கடமைகள்
• சிகிச்சைநிலைய மேற்பார்வை, உதவி ஊழியர்களை (Support Staffs) முகாமைத்துவம் செய்தல்
• சிறுவர்களுக்கான சிகிச்சை வழங்கும் மருத்துவக்குழுவிற்கு தேவையான உதவிகளை வழங்குதல்
• சிறுவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான கொள்கை ரீதியான நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தல்.
• வைத்தியர்கள், சிகிச்சையாளர்கள் வருகை, சிகிச்சை முன்னேற்றம், செலவுகள் தொடர்பான அறிக்கை பேணுதல்.
• நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர், ஊழியர்களிடையே தொடர்பாளராகச் செயற்படுதல்.
• மருத்துவ அறிக்கைகள் தொடர்பான நம்பிக்கைத்தன்மையை பேணுதல்.
சிகிச்சைநிலைய முகாமையாளருக்கான தகைமைகள்
• மருத்துவத்துறை சார்ந்த இரண்டு வருட முன் அனுபவம்
• மருத்துவத்துறை சார்ந்த ஏதாவது கற்கைநெறியில் சான்றிதழ் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது.
• தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை
• விசேட தேவையுடைய பிள்ளைகளுடன் இணைந்து சேவையாற்றுவதற்கான விருப்பம்
• தேவை ஏற்படின் முதலுதவி அளிக்கும் திறன்
• தேவை ஏற்படின் சிகிச்சை நிலைய செயற்பாட்டு நேரத்திற்கு மேலதிகமாக கடமையில் ஈடுபடுதல்
தொடர்புகளுக்கு
தொலைபேசி – +1 (416) 830-7427 Canada Whatsup number
மின்னஞ்சல் – [email protected]