
மறைந்த தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இறுதி சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
இதன்படி இன்று காலை 9.15 மணியளிவில் பரிகேடியர் லக்வீந்தர் சிங் லிடரின் இறுதி சடங்கு கன்டோன்மென்டில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து டெல்லி கராஜ்மார்க்கில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில் அவரது உடலும், மனைவி மதுலிகா ராவத்தின் உடலும் காலை 11 மணி முதல் 12.30 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றன.
இதனையடுத்து மதியம் 12.30 மணி முதல் 1.30 மணிவரை இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதன் பின் அலங்கிரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் பிபின்ராவத்தின் உடல் டெல்லி கன்டோன்மென்டிற்கு கொண்டு செல்லப்பட்டு முழு இராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.