தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் அரசாங்கத்திற்கு உதவப்போவதில்லையென அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற நீதி அமைச்சின் மீதான விவாதத்தில் உரையாற்றியதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ,பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில், அமைச்சர்நாமல் ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகளைநிறைவேற்ற வேண்டும் என்று கோரினார்.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நாமல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
கைதிகளின் விடயத்தில், உரிய நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கும், விடுதலை தொடர்பிலும் அரசாங்கம் பொறுப்புடையதாக உள்ளது. அது ஒரு முறைமையிலானது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனை செய்வதற்கான சட்ட நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.நீதி அமைச்சர் அதற்காக செயற்படுகின்றார்.
முதல் முறையாக நாம் அதனை செய்ய முடியும்.அதனை செய்வோம். முன்னரும் அதனை நாம் செய்துள்ளோம்.
அரசியல் ரீதியான அறிவிப்பை நாம் வெளியிட மாட்டோம்.ஏனெனில், அது எமது அரசியல் வாக்குறுதி அல்ல. அரசியல் கட்சி என்ற அப்படையில், நீங்கள் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) எங்களுக்கு உதவி செய்வதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அத்துடன், நீங்கள் ஒருபோதும் எங்களுக்கு உதவ மாட்டீர்கள்.ஆனால், நாட்டின் பிரஜை என்ற அடிப்படையிலும், அரசாங்கம் என்ற அடிப்படையிலும் எங்களுக்கு பொறுப்பு உள்ளது.அதனை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.