நீர்வேலி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மூன்று வாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலி மேற்கு நீர்வேலியைச் சேர்ந்த நபர் ஒருவரே, நேற்று இரவு 21.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரிடமிருந்து மூன்று வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.