2020ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக பிரவேசத்தை பெற்ற மாணவர்களை, பல்கலைக்கழகத்திற்காக பதிவு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த பதிவு நடவடிக்கைகள் இன்றைய தினம் நிறைவுறுத்தப்படவிருந்தன.
எனினும், மாணவர்களால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டுஇ டிசம்பர் 16ம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கின்றார்.