இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – காந்திபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த காணியின் உரிமையாளர் அந்த காணியில் தோட்டம் செய்வதற்கு நிலத்தை பண்படுத்தியவேளை குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியின் பின்னர் குறித்த குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.