
2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வை ஜனவரி மாதம் 11ஆம் திகதி நடத்துவதற்கு, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இதேவேளை, அடுத்த வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடி தீர்மானிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.