மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி ஆர்பாட்டம்

(கனகராசா சரவணன்)

சர்வதேச மனித உரிமை தினத்தையிட்டு வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கவிற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன், ஒய்வு பெற்ற மட்டு அரசாங்க அதிபர் மா. உதயகுமார்,  மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போன உறவுகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சர்வதேசமே இலங்கை அரசுக்கு துணைபேகாதே, அச்சுறுத்தாதே அச்சுறுத்தாதே. புலனாய்வாளர்களால் அச்சுறுத்தாதே, இலங்கை அரசே ஒப்படைக்கப்பட்டு சரணடைந்த உறவுகள் எங்கே?, ஜ.நாவே ஒஎம்பியை திணிக்க இலங்கை அரசுக்கு துனைபோகாதே, இலங்கை அரசே எமது உறவுகளுக்கும் மதிப்பளி போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி சுமார் ஒருமணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் பின் அங்கிருந்து விலகி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *