தண்டப்பணம் அறவிடும் செயற்பாடுகளை தொழில்நுட்பமயப்படுத்த நடவடிக்கை! வீரசேகர

வாகனங்கள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் தண்டப்பணம் அறவிடும் செயற்பாடுகளை தொழில்நுட்பமயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அநேகமான சந்தர்ப்பங்களில் தண்டப்பணம் செலுத்தி தனது வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள இரண்டு அல்லது மூன்று நாட்கள் செல்கின்றன.

அதனால், ‘ளுPழுவு Pயுஐனு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த முறையின் மூலம் தண்டப்பணம் அறவிடப்பட்ட சந்தர்ப்பத்திலேயே தமது கடன்அட்டை அல்லது வேறு முறையில் தண்டப்பணத்தை செலுத்திவிட்டு வாகன அனுமதிப்பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளக் கூடிய புதிய முறையை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாரதியொருவர் தவறிழைக்கும்போது அவரது வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தால் ஓரளவு விபத்துகளை குறைத்துக்கொள்ள கூடியதாக இருக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் பலர் மரணித்துள்ளதால் சாட்சிகளும் மறைக்கப்பட்டுக் கொண்டே போகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *