திருகோணமலை மாவட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை. தீர்வு கோரி பல கடிதங்கள் எழுதியிருப்போம். அது பலனில்லை.
ஜெனிவா, மனித உரிமைகள் ஆணைக்குழு என எதிலும் நம்பிக்கை இல்லை. இன்று மட்டும் எமது உறவுகளை கண்டறிய படாத பாடு படுகிறோம். பொருளாதார துன்பங்களை அனுபவிக்கிறோம்.
எதிலும் நம்பிக்கையில்லை என கண்ணீர் மல்க இப் போராட்டத்தில் ஈடுபட்டோர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இன்றைய தினத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, வவுனியா போன்ற பல்வேறு இடங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போட்டதை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.