பாகிஸ்தானுக்கு 35 ஆயிரம் கண்களை இலங்கை தானம் செய்துள்ளதாக ஒரு கதை வெளியாகியுள்ளது. இந்த கண்கள் இவ்வளவும் எங்கே இருந்து வந்தது என காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், பாகிஸ்தானுக்கு 35 ஆயிரம் கண்களை இலங்கை தானம் செய்துள்ளதாக தற்போது ஒரு கதை வெளியாகியுள்ளது.
இதுவும் எங்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எங்களுக்கு இந்த சந்தேகத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
மேலும், இந்த கண் இவ்வளவும் எங்கே இருந்து வந்தது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.