அடுத்த ஆண்டு அனைத்து வெளிநாட்டு கடன்களையும் செலுத்தி முடிப்போம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். இது பற்றி எதிர்க்கட்சியினர் அதிகளவில் கதைத்தார்கள்.
நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன். இந்த நிலையில் நான் உங்களுக்கு உறுதி ஒன்றை தருகின்றேன். அடுத்த வருடம் அனைத்து வெளிநாட்டு கடன்களையும் செலுத்தி விடுவோம்.
ஜனவரி மாதமளவில் சுமார் 500 மில்லியன் ரூபாவும் அதற்கு பின்னர் 1,700 மில்லியன் ரூபாவும் கடன்களை படிப்படியாக செலுத்தவுள்ளோம்.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கொரோனவோ நாமோ மட்டும் காரணம் இல்லை. கடந்த ஆட்சியாளர்களும் முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.