‘தூய கரம், தூய நகரம்’ துரித அபிவிருத்தி திட்டத்தின் அடுத்த கட்டமாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் எண்ணக்கருவில், யாழ்ப்பாண அடையாளத்தின் ஒன்றாகிய மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்தும் நோக்குடன் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இத்திட்டத்தின் மாதிரிப்படம் மாநகர முதல்வரால் இன்று வெளியிடப்பட்டது.


