பலாலி வீதி கந்தர்மடத்தில், புதிதாக அமைக்கப்பட்ட ‘நித்திலம் கலையகம்’ திறப்புவிழாவும், ஆதி மொழியான தமிழ் மொழியின் முதலாவது வாத்தியக் கருவியாக இருந்து வந்த யாழ் இசைக்கருவியையும், அதன் இசையையும் மீள் அறிமுகம் செய்யும் நிகழ்வு, முதலாவது திரைப்படமான தூவானம் திரைப்பட அறிமுக நிகழ்வு, இசை வெளியீடு ஆகிய நிகழ்வுகள் எதிர்வரும் 12.12.2021 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொள்கின்றார். இந்நிகழ்வில், கலந்துகொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் 0772267191 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு இக் கலையகத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நித்திலம் கலையகம் மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும், தமிழ் கலை கலாசார வளர்ச்சிக்காகவும் சுற்றாடலை பசுமைப்படுத்துவதற்காகவும் பல பணிகளை ஆற்றி வருகின்றது.
‘நித்திய தமிழ் ஆரோக்கியம்’ என்ற அரோக்கிய இணையத்தளம் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக இயக்கி வருகின்றது.
அத்துடன், இலவச மரக்கன்று விநியோகம், மர நடுகை போன்ற நிகழ்வுகளையும் தொடர்ச்சியாக ஆற்றி வருகிறது.
இக் கலையகம், மக்களின் அரோக்கியத்தை மேம்படுத்துமுகமாக பல கட்டுரைகளை பத்திரிகைகளிலும், முகநூல்களிலும் பிரசுரித்து வருவதுடன் அதனை தொகுத்து வழங்கியும் வருகிறது.
மேலும், thamilhealth.com தளத்தினுடாக வைத்திய நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள், எமது கலாசாரம் மருவிய கலைப்படைப்புக்கள் அடங்கிய கானொலிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.