மட்டக்களப்பு மாநகரசபை வரவு – செலவு திட்டம் 23 வாக்குகளால் நிறைவேற்றம்

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாநகரசபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (10) 23 வாக்குகளால் வெற்றி பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது 

மாநகரசபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்காகன சபை அமர்வு இன்று மாநகரசபை மண்டபத்தில் சபை முதல்வர் ரி. சரவணபவான் தலைமையில் இடம்பெற்றபோது 37 மாகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 

இதன் போது வரவு செலவு திட்டத்தை சபை முதல்வர் ரி.சரவணபவான் முன்வைத்து வாக்கெடுப்பு இடம்பெற்றது இதில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும், நடுநிலையாக ஒருவாக்கும் ஒருவர் சபை அமர்வில் சமூகமளிக்கதலைநிலையில் 23 வாக்களால் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு கிடைத்ததையடுத்து வரவு செலவு திட்டம் வெற்றி பெற்று நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *