வவுனியா – ஈரற்பெரியகுளம் பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
வவுனியா தவசிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா ரவி என்ற 55 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தார்.
இன்று மாலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறைநோக்கி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயில் வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது குறித்த நபர் ரயிலில் மோதி உயிரிழந்தார்.
அவரது உடமையில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2021ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!