வடக்கு தீவுகளுக்கான விஐயமொன்றை மேற்கொண்ட ஆளுநர் ஜீவன்!

வடக்கு தீவுகளுக்கான விஐயமொன்றை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, காரைநகர் தீவிலிருந்து கடல் வழியாக சென்று இலுவைதீவு மற்றும் அனலைதீவு, பாலைதீவு, கக்கரைதீவு மற்றும் கச்சதீவுகளை நெடுந்தீவு வழியாக பார்வையிட்டுள்ளார்.

இலங்கையின் நெடுந்தீவு மற்றும் கச்சதீவுகளுக்கு அருகில் உள்ள கடற்பகுதிகளில் இந்திய மீன்பிடி இழுவை படகுகள் கடற் சட்டத்தை மீறி வேட்டையாடுவதையும் ஆளுநர் இதன்போது அவதானித்தார்.

இவ் விஜயத்தில் வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் இலங்கை கடலோரக் காவற்படையின் தலைவர் புத்திக ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை கடற்படை கப்பல் வசப இன் கட்டளை அதிகாரிகள் தத்தமது பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஆளுநருக்கு அடிப்படை உண்மைதன்மைகளை எடுத்து விளக்கினர்.

அடிமட்ட இழுவை படகுகள் மூலம் வேட்டையாடுதல், வடக்கு கடலில் உள்ள வளமான கடல் தளங்களை அழித்தல் மற்றும் திருட்டுதனமாக மீன் பிடித்தல் போன்ற நிரந்தர பிரச்சினைகளுக்கு இரு நாடுகளின் இரு தரப்பு அதிகாரிகளிடையேயான ஒப்பந்தம் ஓன்று இருந்த போதிலும் ஒரு நடைமுறை தீர்வு காணப்படவில்லை.

அத்துமீறலை தடுக்க இலங்கை கடற்படையும், கடலோர காவற்படையும் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டாலும், அவ்வாறான மீனவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்த போதிலும் அடிக்கடி இவ்வாறான அத்துமீறல் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது என்பதையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.

வடக்கு கடற்படை தளபதியுடன் ஆழமான மற்றும் பிற கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு குறித்தும் விவாதித்தார்.

வடக்கு மாகாணத்தின் செழிப்பையும், அபிவிருத்தியையும் நிலை நிறுத்துவதற்கு தீவுகளில் உள்ள பரந்த சாத்தியக்கூறுகளை மிகவும் கூர்ந்து மதிப்பீடு செய்தார்.

தீவுகளின் நிலைமையை மாற்றி அமைப்பதற்கு அரச அதிபர், கிராம சேவகர், மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச சபைகளின் உதவியுடன் ஆளுநர் தீவுகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களை அதன் வரலாற்று நிலைக்கு மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றார் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

பங்குதாரர்களுடன் இணைந்து ஒவ்வொரு தீவு தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு ஆளுநர் அரச அதிபர்களுக்கு அறிவுறுத்தினார்.

அவ்வாறு ஆளுநரால் முன்வைக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:

1.படகுகள் மூன்றும் கடற்படையின் உதவியுடன் இயக்கப்பட வேண்டும், தீவில் வசிப்பவர்கள் அல்லாதவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும், பொது ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு உதவி வழங்கப்படும்.

  1. 2. ஆரோக்கியம் – எல்லா தீவுகளின் மருத்துவ வசதிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலை வழிகாட்டி மருத்துவமனையாக செயற்படுவதுடன இயன்றளவு அரச சார்பற்ற நிறுவனங்களில் மருத்துவ வண்டி நடமாடும் மருத்துவ சேவையாக செயற்படுதல்.
  1. 3.யாழ் மாநகர சபையின் வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு தீவுக்குமான பிரதேச சபையினால் உள்ளுர் அதிகார சேவைகளை வழங்குதல்.
  2. 4.பல இடங்களில் படகு சேவை மேம்படுத்தப்பட வேண்டும், குறுகிய கால தீர்வுகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
  3. 5.கட்டுமான பொருட்களுக்கான மொத்த போக்குவரத்து சேவை மற்றும் அத்தியாவசிய உணவு வழங்கும் கூட்டுறவு சேவையை ஆரம்பித்தல்.
  4. 6.ஊர்காவற்துறையில் குடும்ப வறுமையை காரணமாகப் பயன்படுத்தி சில பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சிலர் தவறான செயற்படுகளில் ஈடுப்படுத்த முற்படுகின்றனர். அவர்களின் வாழ்கையையும் சுயமரியாதையும் மீட்டெடுக்க உதவ வேண்டும்.
  5. 7.கல்வி சேவை – நான்காம் வகுப்பு சேவைகளில் உடனடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், வசதி படைத்த பாடசாலைகள் ஒவ்வொரு தீவினதும் ஒரு வசதி குறைந்த பாடசாலைக்கு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாக செயற்பட வேண்டும்.
  6. 8.நீர் மற்றும் சுகாதாரம் – ஒவ்வொரு தீவு வாழ் குடிமக்களுக்கும் குடிக்க குளிக்க சமைக்க நீர் கிடைக்கப்படுவதை உறுதிப்படுத்தல்.
  7. 9.நீதிமன்றங்கள் செயற்பட வேண்டும்.
  8. 10.ஒவ்வொரு ஏழையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்தி அலுவலர்கள் மற்றும் திட்டமிடல் அலுவலர்கள் குழுக்களாக இணைந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
  9. 11.யாழ்பாண மாவட்ட செயலகம் மற்றும் வடக்கு மாகாண சபையிலிருந்து ஒவ்வொரு தீவுக்கும் வழிகாட்டி அதிகாரிகளை நியமித்தல் என்பனவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *