கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்றும் தடுப்பூசி வழங்கல் திருப்திகரமான நிலையில் இருப்பதால், அதனை மேலும் பாதுகாக்கும் வகையில் பண்டிகைக் காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை முடிந்தவரை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இல்லாவிடில் புத்தாண்டு போன்று மற்றுமொரு கொத்தணி உருவாகும் வாய்ப்பு உள்ளது எனவும் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
மேலும், பண்டிகைக் காலங்களில் வீடுகளில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் விருந்துகளில் பங்கேற்போரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது கடினம்.
நாட்டை மூடுவதே சிறந்த மற்றும் எளிமையான நடவடிக்கை என சிலர் கூறினாலும், அது பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார்.