இந்த காலப்பகுதியில் ஊடகவியலாளர்களின் பங்கு முக்கியமானது எனவும், நாட்டை மேம்படுத்துவதற்கு ஊடகவியலாளர்கள் உதவ வேண்டிய தருணம் இதுவாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பத்திரிகையாளர்கள் களமிறங்க வேண்டிய நேரம் இது. அரசாங்கம் மற்றும் அரசியல் செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதனாலும், மோசடிகளை அம்பலப்படுத்துவதனாலும், எதிர்கால சந்ததியினரை நெறிப்படுத்துவதன் மூலமும், ஊடகவியலாளர்கள் தேசத்திற்கு சேவை செய்கிறார்கள்.
கடந்த 2 வருடங்களில் வெகுஜன ஊடகத் துறை மாறியுள்ளது, நெறிமுறையான வெகுஜன ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை ஊக்குவிக்க மேலும் பல மாற்றங்கள் செய்யப்படும் என நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மீள் உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை! அமரவீர