பீல்ட் மார்சல் பதவியை வகிக்கும் பொன்சேகா சபையில் கௌரவமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்! வீரசேகர பதிலடி!

பீல்ட் மார்சல் பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் கௌரவமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். தனது பதவி நிலை என்னவென்பதைப் புரிந்து செயற்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:-

பீல்ட் மார்சல் பதவி இராணுவத்தின் உயர் பதவியாகும். அந்தப் பதவியை வகிப்பவருக்கு அரச சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இதற்கு மக்கள் பணமே செலவிடப்படுகின்றது. எனவே, மக்களுக்கு சரத் பொன்சேகா சேவையாற்ற வேண்டும்.

நல்லாட்சி அரசு போர்க்குற்றம் தொடர்பில் படையினரைக் காட்டிக்கொடுத்தது. அப்போது பொன்சேகா மௌனம் காத்தார் என்றார்.

சரத் பொன்சேகாவுக்கும், சரத் வீரசேகரவுக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் தொடர் சொற்போர் நீடித்து வருகின்றது.

இந்நிலையில், நேற்று சரத் பொன்சேகா ஆற்றிய உரை மற்றும் இன்று சரத் வீரசேகர ஆற்றிய உரைகளில் இருந்து பொருத்தமற்ற விடயங்களை நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நிறைவேற்றிய பட்ஜட்டுக்கு சபாநாயகர் சான்றுரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *