உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவது குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கு ஜோசேப் எதிர்ப்பு!

உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசேப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக தனியார் பல்கலைக்கழங்களை நிறுவுவது சிறந்தது என ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தானது மிகவும் பாரதூரமானது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வறுமையில் வாழும் குடும்பங்களின் நிலையை கல்வியே மாற்றி வருகின்றது. ஆகவே கல்வியைப் பாதிக்கும் வகையில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையானது எதிர்கால சந்ததியையே பாதித்துவிடும்.

ராஜபக்ச அரசாங்கம் நாட்டில் உள்ள துறைகைளை இராணுவமயமாக்கி வருகின்றது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்திடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டது, ஆனாலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது போனது.

சுகாதார அமைச்சர்களை மாற்றினார்கள். இதனைவிட பல்வேறு விடயங்களைச் செய்தார்கள். ஆனாலும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

உயர் கல்வியை இராணுவ மயமாக்க கடந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நாட்டில் ஏற்பட்டிருந்தது.

தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட ஏற்பாடு கொண்டுவரப்படுமாயின் அதற்கு எதிராக போராட்டம் எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்படும்.

ஆகவே, இது தொடர்பாக ஜனாதிபதி சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண்பதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்க முடியும்! சித்தார்த்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *