
நடைபெற்று வரும் LPL T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைப் பெற்றது.
ஜெப்னா கிங்ஸ் அணி சார்பாக திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும், ஷோயப் மலிக் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
கொழும்பு கிங்ஸ் சார்பில் சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
கொழும்பு கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அஷான் பிரியஞ்சன் 35 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களையும் எடுத்தனர்.
