மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குருக்கள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டையை சேர்ந்த 70 வயதுடைய இரத்தினசபாபதி, ஜெகதீஸ்வர குருக்களே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் ஆலய பூஜையை முடித்துக்கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய வேளை, எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குருக்களை, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.