விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட திரவ உர கொள்கலன்கள் வெடிப்பு!

பொலன்னறுவை மாவட்டத்தில் விவசாய திணைக்களத்தால் வழங்கப்பட்ட கரிம திரவ உர கொள்கலன்கள் வெடித்து கடும் துர்நாற்றம் வீசுவதாக விவசாய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

பொலன்னறுவை மாவட்டத்தில் நெற்செய்கைக்காக சில தினங்களுக்கு முன்னர் கரிம திரவ உரம் மற்றும் இரசாயன கூடை உரம் விவசாய அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

திரவ உரக் கொள்கலன்களை வீட்டில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வப்போது நிரம்பி வழிவதால் எமது வாழ்வில் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

சேமித்து வைக்கப்பட்டிருந்த சில திரவ உர கொள்கலன்கள் பலூன்கள் போல் வீங்கிப் போவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த திரவ உரம் உள்ளூர் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயத் திணைக்களம் மூலம் அரசுக்கு இலவசமாக வழங்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

பயணத்தடையை நீக்கியமை அரசாங்கத்தின் திட்டமிடப்படாத தீர்மானம்! சுகாதார நிபுணர்கள் குழு குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *