
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது .
2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (1) இன் விதிகளின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜகத் பண்டார லியனாராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்தன, ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோரும் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.