யாழ். வட்டுக்கோட்டையில் பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது!

<!–

யாழ். வட்டுக்கோட்டையில் பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது! – Athavan News

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்தநாளான  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் வட்டுக்கோட்டை குக் வீதி முதலாம் ஒழுங்கையில் யாழ்.இந்திய நட்புறவுப் பேரவையின் தலைவர் சிதம்பரம் மோகனினால் நிர்மாணிக்கப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலையை மறவன்புலவு சச்சிதானந்தன் திறந்து வைத்தார்.

நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், இந்து சமய மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *