புத்தளத்தில் பஸ் குடைசாய்ந்து கோர விபத்து: 16 பேர் காயம்!

புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு 5 அடி பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

எலுவாங்குளம் பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற பஸ் வண்ணாத்திவில்லு பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு 5 அடி பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 16 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். புத்தளம் ஆதார வைத்தியசாலையில் 11 பேரும் வண்ணாத்துவில்லு வைத்தியசாலையில் 5 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வண்ணாத்துவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது இருவர் படுகாயமடிந்துள்ளதாக பொலுஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வண்ணாத்துவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *