அஞ்சல் திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர், சாந்த குமார மீகம இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சேவையுடன் தொடர்புடைய தங்களது பிரச்சினைகள் உள்ளிட்ட, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
திங்கட்கிழமை 13ஆம் திகதி மாலை 4 மணிமுதல், 14 ஆம் திகதி நள்ளிரவுவரை இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!