ஹிஷாலினிக்கு நீதி கோரி டயகமவில் ஆர்ப்பாட்டம் (க.கிஷாந்தன்)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான புரொடெக்ட் .அமைப்பின் தலைமையில் நேற்றைய தினம் (10.12.2021) டயகம தோட்டம் 5ம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக விழிப்புணர்வு வீதி நாடாகமும், கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றது. 

“சிறுவர் தொழில் மற்றும் சிறுவர்களை வீட்டுத் தொழிலுக்கு அமர்த்துவதை நிறுத்து” எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்புரிந்துக் கொண்டிருந்த 16 வயதுடைய ஹிஷாலினியின் மரண விசாரணை இதுவரை ஈழுப்பறியாக இருப்பதாகவும் இதற்கு உடனடியாக தீர்வு கோரியும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்தோடு, மக்கள் எதிர்நோக்கும், காணி, தொழிலாளர்களின் பிரச்சினைகள், அத்தியாவசிய பொருட்களுக்கான  விலைவாசி  அதிகரிப்பு, கல்வி தொடர்பான பிரச்சினைகள், சிறுவர், பெண்கள் உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

இதில் அரச சார்பற்ற அதிகாரிகள், சிவில் அமைப்பினர், உட்பட புரொடெக்ட் .அமைப்பின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், சமூக ஆர்வாலர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *