முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை மல்லாவி பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
உயிலங்குளம் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் மல்லாவி பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கடற்கரையில் பறக்கும் சிகப்பு கொடி: மக்களுக்கு எச்சரிக்கை!