விற்பனைக்காக சாராயம் வாங்கிச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சாராயத்தை வாங்கிச் சென்றுகொண்டிருந்தவேளை, வட்டுக்கோட்டை சந்தியில் வைத்து பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.
இதன்போது, பொலிஸார் அவரிடம் இருந்த 48 கால் சாராயப் போத்தல்கள் கைப்பற்றியதுடன், அவரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.