டயகம சிறுமி ஹிஷாலினி மரணத்துக்கு நீதி கோரி உலக மனித உரிமைகள் தினமான நேற்று டயகம பிரதேச வாசிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ஹிஷாலினியின் மரணம் குறித்து முறையான நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது பெண்கள் -சிறுவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தெரு நாடகம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.