பொரளை நகரில் உள்ள நகை கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான முக கவசம் அணிந்துகொண்டு மோட்டார்
சைக்கிளில் வருகை தந்த இருவரே இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
வானை நோக்கிச் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.