
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் முடிவடையது.
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதில் தலைமைச் செயலாளர், மருத்துவத் துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும்.