வவுனியா – பூவரசன்குளம் பகுதியில், தனியார் கோழி பண்ணை ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா – பூவரசன்குளம் பகுதியில், தனியார் நபருக்கு சொந்தமான கோழி பண்ணை ஒன்றிற்குள் மாடு சென்றமையால் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் பண்ணையில் இருந்து முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை வழிமறித்து தாக்கியமை என்பன காரணமாக பெண் ஒருவர் உட்பட மூவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் காயமடைந்து தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பூவரசன்குளம் பொலிசார் அப் பகுதியை சேர்ந்த மூவரை நேற்று இரவு (11) கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.