கொட்டகலை பகுதியில் மற்றுமொரு லிற்றோ எரிவாயு அடுப்பு, இன்று அதிகாலை வெடித்துள்ளது.
இதனை திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டகலை டிரேட்டன் கே.ஓ. பிரிவில் பழைய விடமைப்பு திட்டத்தில் உள்ள வீடொன்றில் இன்று (12) அதிகாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல்ல பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.