விவசாயத்தை அழித்ததைப் போல இலவச கல்வியையும் அழிக்கப் போகின்றாரா ஜனாதிபதி? ஜோசப் ஸ்டார்லின் கேள்வி

விவேகமற்ற கொள்கைத் தீர்மானங்களினால் நாட்டின் விவசாயத்தை அழித்ததைப் போன்று நாட்டின் கல்வியையும் ஜனாதிபதி அழிக்கப் போகின்றாரா? என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் காலத்திற்கு காலம் எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டின் பல துறைகளிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச பல்கலைக்கழகங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்துக்கள் தற்போது கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமானது கல்வியை தனியார் மயமாக்கும் சட்டமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வியை அந்நிய செலாவணி ஈட்டும் முறையாக மாற்றுவது தொடர்பான ஜனாதிபதியின் உணர்வுகளை மேற்கோள்காட்டி, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவேகமற்ற கொள்கைத் தீர்மானங்களினால் நாட்டின் விவசாயத்தை அழித்ததைப் போன்று நாட்டின் கல்வியையும் ஜனாதிபதி அழிக்கப் போகின்றாரா..? என்ற நியாயமான சந்தேகம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்று அமைச்சர்கள் இருந்த போதிலும் கல்வி முறைமை பிரச்சினைகளால் நிரம்பி வழிகிறது என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் கல்வியை புறக்கணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *