கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகுட்பட்ட 30 வயதுக்கும் மேற்பட்டவர் களுக்கு மூன்றாவது பூஸ்டராக பைசர் தடுப்பூசி (11) வழங்கப்பட்டன.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி தலைமையில் இத் தடுப்பு மருந்து ஏற்றும் பணி இடம் பெற்றது.
கொரோனாவை ஒழிக்கும் முகமாக அரசாங்கத்தின் இவ் இலவச தடுப்பூசி ஏற்றும் பணி இடம் பெறுகின்றது.
முன்னர் இரு டோஸ்கள் சைனோபாம் பெற்றவர்களே தற்போது பைசர் தடுப்பு மருந்தினை பெற்று வருகின்றார்கள்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,கிண்ணியா அல் அக்சா கல்லூரி, ஆலங்கேணி வைத்தியசாலை ஆகிய இடங்களில் இத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம் பெற்றன.
குறித்த பிரதேச மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியினை பெற்றுச் செல்வதனை அவதானிக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.