சதொசவில் குறைந்த விலைக்கு 50 அத்தியாவசிய பொருட்கள்; எல்லாம் மலிவு! அரசாங்கம் அறிவிப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சில பொருட்களை நிவாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன்று முதல் வருட இறுதி வரையில், சதொச வர்த்தக நிலையங்களில், சில வகையான அரிசிகளை, 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும்.

சதொச வர்த்தக நிலையங்களில், 50 அத்தியாவசிய பொருட்களை இன்று முதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

நாடு அரிசி ஒரு கிலோகிராம் 99 ரூபா 50 சதத்திற்கும், சிறந்த சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபா அளவிலும் சதொச வர்த்தக நிலையங்களின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

எந்தவொரு அரிசி வகையையும், சதொசயில் தலா 5 கிலோகிராம் அளவில் பெற்றுக்கொள்ள முடியும்.

சீனி ஒரு கிலோகிராம் 125 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோகிராம் 240 ரூபாவுக்கும், நூடில்ஸ் ஒரு பைக்கற்று 125 ரூபாவுக்கும், சவர்க்காரம் உள்ளிட்ட 50 பொருட்களை, சந்தையில் நிலவும் விலையை விடவும், குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *