அரிசிக்குத் தட்டுப்பாடு வராது! விவசாய அமைச்சர் நம்பிக்கை

நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இரசாயன உரத்துக்கான தடையையடுத்து, நாட்டில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வயல் நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் நாட்டில் அரசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனப் பல தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.

இதற்கு ஊடகங்களிடம் பதிலளிக்கையிலேயே விவசாயத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

10 மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் இருக்கின்றது எனவும், பெரும்போகத்தின்போது தேவையான அறுவடை கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக்குள் உள்நுழைவதை தடுக்குமாறு வலி.மேற்கு தவிசாளர் இந்திய துணைத்தூதுவரிடம் கோரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *