அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ள போதிலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே அவ்வாறான ஆதரவு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் மூன்றில் இரண்டு இருக்கின்றது என்பதை நிரூபித்துக் காட்டுமாறும் அவர் சவால் விடுத்துள்ளளார்.
மேலும், நாட்டு வளங்களைப் பாதுகாக்க வந்த அரசு அமைச்சரவைக்கும் தெரிவிக்காமல் அனைத்து வளங்களையும் விற்பனை செய்கின்றது.
அரசு விவசாய சமூகத்தை சட்டியில் இருந்து அடுப்புக்குள் தள்ளிவிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களை இந்தியா கைவிடாது: நிதியை பெறுமாறு அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி ஆலோசனை!