முடிந்ததால் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்திக்காட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது.
இந்தநிலையில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்த குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பாக்கிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்தவிற்காக அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கேட்கும் அரசாங்கம், ஏன் அந்த உரிமையை இலங்கையில் வாழக்கூடிய தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தத் தயங்குகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி முக்கிய ஆவணம் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.