கொடிகாமம் – பருத்தித்துறை – வரணி பிரதான வீதியில் பயணிப்பவர்கள் விபத்தைச் சந்திக்கவேண்டிய அபாய நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் இந்து மயானத்திற்கு அண்மித்த பகுதியில் காணப்படும் பாலத்தை இணைக்கும் நிலப் பகுதி தாழிறங்கிக் காணப்படுகிறது.
இதில் பயணித்த சில மோட்டார் சைக்கிள்கள் நிலை தடுமாறி விபத்தைச் சந்தித்துள்ளன. குறித்த இடத்தை அடையாளப்படுத்தும் வகையில் எந்த ஏற்பாடும் காணப்படாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், அந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள சமூக ஆர்வலர்கள், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த சிக்கலை விரைந்து தீர்க்கவோ அல்லது மக்களை எச்சரிக்கும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளவோ நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முடிந்தால் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்திக்காட்டுங்கள்: அரசாங்கத்திற்கு மனோ சவால்!